தேசிய ஓய்வூதியத் திட்டம் - NPS Scheme Details Tamil | Open NPS Account Online.

இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் NPS 2004ஆம் ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. இது 2009ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் பயன்பெற அரசு ஒப்புதல் அளித்தது. 18 வயது முதல் 60வயது வரை உள்ள அனைவரும் இக்கணக்கினை திறக்கலாம். இருப்பினும் 70 வயது வரை நீடித்து கொள்ளலாம்.

nps-scheme-details-nps-interest-rate-nps-benifits

NPS முதலீட்டு வகை: A - Real Estate முதலீடு C - Corporate Bonds- ல் முதலீடு E - Equity முதலீடு செய்யப்படுகிறது G -அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. Type Of NPS Account:

Tire 1 Account: இந்த கணக்கு வருமானவரி பிரிவு 80C -ன் படி ஆண்டு ஒன்றுக்கு 1.5 இலட்சம் வருமான வரி விலக்கு பெற முடியும்.அதுமட்டும் இல்லாமல் கூடுதலாக 80CCD (1B) ன் படி கூடுதலாக 50,000₹ வரி விலக்கு பெறலாம். இது திரும்ப பெற முடியாத நிரந்தர ஓய்வூதிய கணக்கு. முதிர்ச்சியில் 60வயதில் வரி இல்லாமல் 40% திரும்ப பெறலாம். மீதம் உள்ள 60% சதவீதம் ஓய்வு ஊதியம் போல் மாதா மாதம் கிடைக்கும். இந்த செயல்பாடுகளின் மூலம் PPF மற்றும் EPF போன்ற பிற சேமிப்பு திட்டத்திற்கு இனையாக NPS திட்டம் உள்ளது.

Tire 2 Account: இது தன்னார்வ விருப்ப திட்டமாகும். Tire 1 திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே Tire 2 திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில் முதலீடுகள் செய்பவர்கள் பணத்தினை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தனியார் துறை ஊளியர்கள் சுய தொழில் செய்பவர்களுக்கு வரி விலக்கு இல்லை. 2019ல் நிதி அமைச்சர் 2020-2021ல் வரி விலக்குகளில் சலுகை அளிக்கப்படலாம் ஆனால் Lock-in period உடன்‌ சலுகை வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

NPS Tax Benefits:

• NPS -ல் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி சட்டம் 1961-ன் படி பிரிவு 80C ன் கீழ் 1.5 இலட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறலாம்.

• NPS முதலீட்டாளர்கள் சுமார் 50,000₹ வரை 80CCD (1B) சட்டத்தின் படி கூடுதல் வரிச்சலுகை உண்டு.

• முதலீட்டு வரம்பான 80 C படி 1,50,000₹ கூடுதல் வரம்பான 80CCD (1B) படி 50,000₹ மற்றும் 80CCD (2) ன் கீழ் 10% வரை முதலாளி பங்களிப்புகளில் வரிச்சலுகை கோரலாம்.

National Pension Scheme Login:

NPS கணக்கு வேண்டுமானால் முதலில் PRAN எண் வேண்டும். PRAN எண் என்பது 12 இலக்கம் உடைய எண் இதன் மூலம் NPS கணக்கு வைத்திருப்பவர்களை அடையாலம் காண முடியும். PRAN எண் கிடைத்த பிறகு NPS கணக்கை தொடங்க முடியும்.

NPS Login Via NSDL: 1. Login to https://www.npscra.nsdl.co.in/ 2. click open NPS Account 3. Login with PRAN/IPIN 4. Insert with PRAN and Password 5. click on proceed and submit to view your E-NPS account. NPS Rules of Allocation:

NPS மூலம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. NPS திட்டம் E மூலம் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் 50% பங்களிப்பை அளிக்க முடியும். Active Choice மற்றும் Auto choice மூலம் உங்களுடைய பங்களிப்பை அளிக்கலாம்.

Acive Choice - இந்த வகையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் எதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Auto Choice - இத்தகைய தேர்வின் கீழ் உங்களின் வயதை பொருத்து முதலீட்டை தீர்மானிக்கின்றது. குறைந்த வயது உடையவராக இருந்தால் பங்கு முதலீட்டில் அதிகாமாகவும் அதிக வயது உடையவராக இருந்தால் குறைந்த அபாயமுடைய வகையில் முதலீடு செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள்:

மத்திய மாநில அரசு ஊளியர்கள் மட்டும் இன்றி அனைவரும் ஓய்வு ஊதியம் பெறும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வகையில் அனைவரும் முதலீடுகள் செய்யலாம். நிறுவன சட்டம் மற்றும் கூட்டுறவு சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை மற்றும் சங்கத்தில் பணிபுரிபவர்கள் இதில் பயன்பெறலாம். சாதாரண பொதுமக்கள் மட்டும் இன்றி PFRDA ஆல் அங்கிகரிக்கப்பட்ட கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்பெற முடியும்.